Sunday, 5 October 2014

தர்கா சொத்து விபர பட்டியல்


ஹஜ்ரத் மீர் ஹசனுல்லா ஷா தர்காவிற்கு சொந்தமான சொத்து விபரம் குறித்து நிர்வாகத்தின் சார்பாக தர்காவில் அறிவிப்பு எழுதப்பட்டு உள்ளது.

வக்ப் கலந்தாய்வு கூட்டம்


07/09/2014 ஞாயிற்றுகிழமை அன்று
வக்ப் நிலங்களை கண்டறிதல், மீட்டல் & பாதுகாத்தல் தொடர்பான
கலந்தாய்வு கூட்டம் தர்கா செயலாளர் மஹபூப் ஷரீப்
தலைமையில் நடந்தது.
தர்கா முத்தவல்லி நஜீர்பாஷா
முன்னிலை வகித்தார். கோர்ட் பாபு
என்கிற ஜாகீர் உசேன் நன்றியுரை கூறினார். நிகழ்சியின் போது எடுத்த படங்கள்

தென்னூர் மகாத்மா காந்தி பள்ளிக்கு பின்புறம் இருக்கும் நமது தர்காவுக்கு சொந்தமான இடம்

தென்னூர், அண்ணாநகர், மகாத்மா காந்தி பள்ளியின் பின்புறம் இருக்கும்
ஹஜ்ரத் மீர் ஹசனுல்லா ஷா
தர்காவுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் தர்கா நிர்வாகத்தின்
சார்பாக வைக்கப்பட்டு இருக்கும் அறிவிப்பு பலகை.

 

Friday, 13 December 2013

மீர் ஹசனுல்லா ஷா தர்காவின் சந்தனக்கூடு விழா

திருச்சி மாவட்டம், தென்னூர் வட்டம், பென்ஷனர் தெருவில் அமைந்திருக்கும்,
ஷாத்தோ ஷஹீதான்கா மக்கான், மீர் ஹசனுல்லா ஷா அவுலியா தர்காவின் சந்தனக்கூடு விழா மிகவும் சிறப்பான முறையில் நடந்தது.
விழாக்குழு தலைவர் பங்காளி& ஹாஜி. காதர் ஷெரீப் தலைமை தாங்க, தர்காவின் நிர்வாகக்குழு செயலாளர்.மஹபூப் ஷெரீப் முன்னிலை வகிக்க, தர்காவின் நிர்வாகக்குழு தலைவர் நஜீர் பாஷா, ஆலோசனைக்குழு தலைவர் நியாஸ் அஹமதுகான் & நிர்வாகக் குழு உறுப்பினர் சையத் முஸ்தபா உசேன் ஆகியோர் வரவேற்க மற்றும் பங்காளிகள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள, பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முடிவில் தர்காவின் நிர்வாகக்குழு துணைத்தலைவர் ஜாகீர் உசேன் (எ) கோர்ட் பாபு நன்றியுரை கூறினார்.
சந்தனக்கூடு  நிகழ்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.




மீர் ஹசனுல்லா ஷா தர்காவின் சந்தனக்கூடு சுவரொட்டிகள்

ஷாத்தோ ஷஹீதாங்கா மக்கான், ஹஜ்ரத் மீர் ஹசனுல்லா ஷா அவுலியா தர்காவின் சந்தனக்கூடு விழா இன்ஷா அல்லாஹ் ஹிஜிரி 1435-ஆம் ஆண்டு, முஹரம் பிறை 21, ஆங்கில தேதி 26-11-2013 அன்று நடைபெறவிருப்பதை முன்னிட்டு மீர் ஹசனுல்லா ஷா தர்காவின் நிர்வாக கமிட்டியின் சார்பாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

Thursday, 12 December 2013

ஹஜ்ரத் மீர் ஹசனுல்லா ஷா தர்காவின் கொடியேற்றுவிழா நிகழ்சி

ஹஜ்ரத் மீர் ஹசனுல்லா ஷா தர்காவின் கொடியேற்றுவிழா நிகழ்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இந்நிகழ்வின் போது நிர்வாகிகள் மஹபூப் ஷெரீப், நஜீர்பாஷா, ஜாகீர் உசேன் (எ) கோர்ட் பாபு, அன்வர் பாஷா, காதர் ஷெரீப், சையத் முஸ்தபா உசேன் (எ) சுந்தர், நியாஸ் அஹமது கான் (எ) பாபு மற்றும் பலர் உள்ளனர்.

Saturday, 5 January 2013

ஹஜ்ரத் மீர் ஹசனுல்லா ஷா தர்கா

ஹஜ்ரத் மீர் ஹசனுல்லா ஷா தர்காவின் தற்போதைய புகைப்படங்கள்!